Wednesday, 19 April 2017

ஊடக துறைக்கு விவி மினரல் நிறுவனம் வந்ததாலா அல்லது போட்டியாளரிடம் பெற்ற பணத்திற்காகவா? எதற்காக ஜீனியர் விகடன் பொய் செய்திகளை பரப்பி வருகிறது? ஜீவிக்கு எழுதிய ஆட்சேபணை கடிதம் பொது மக்கள் பார்வைக்காக ..


From: Raja Menavar Sangam <rajamenavar@gmail.com>
Date: 2017-04-19 15:12 GMT+05:30
Subject: ஜோடிக்கப்பட்ட செய்திகளை வழங்காதீர்கள் !!!
To: jv@vikatan.com, av@vikatan.com


அன்புடையீர்,

“தறிகெட்ட தாதுமணல் கொள்ளை, விசாரணை வளையத்திற்குள் விவி மினரல்ஸ் என 23.4.2017 தேதிய ஜீனியர் விகடனில் வெளிவந்த செய்தியை பார்த்த உடன் தங்கள் பத்திரிக்கையில் வரும் செய்தி அனைத்தும் இதே போல் ஜோடிக்கப் பட்டதோ என்ற எண்ணத்தை என் மனதில் ஏற்றி விட்டது. நான் கடற்கரை கிராமத்தை சேர்ந்த மீனவன். எந்த இடத்திலும் தூண்டில் வளைவுகள் யாராலும் சேதப்படுத்தப்படவில்லை. 

உவரியில் தூண்டில் வளைவு இப்போது தான் அமைத்து வருகிறார்கள். எந்த காலத்திலும் கழிவு மணல் கடலில் கொட்டப்படுவதில்லை. அதுவும் கடந்த 3 வருடங்களாக சுரங்க பணியே நடக்காத நிலையில் காவல் கிணறு கிராமத்தில் செம்மண் வெட்டி எடுக்கப் பட்ட இடத்தை முதல் போட்டாவாக போட்டு பேடி கடற்கரையில் உட்கார்ந்து இருப்பதை 2-வது போட்டாவாக போட்டு தாங்கள் கயிறு திரித்து விட்டு இருப்பது என்னை போன்ற ஜீனியர் பத்திரிக்கையை நம்புபவர்களுக்கு ஒரு சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது. இதனை எழுதி ஆன்டணி ராஜ் என்பவர் சில வாரங்களுக்கு முன்பு இதே போல் விவிக்கு எதிராக ஒரு கட்டுரையை தங்கள் பத்திரிக்கையில் எழுதி இருந்தார். அவர் உங்களிடம் சம்பளம் வாங்குவதோடு மட்டும் இன்றி அவரது உறவினரான திரு.தயாதேவதாசின் மருமகனான தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ஜான் சாலமோன் என்பவருக்கும் விவி நிறுவனத்தின் போட்டி நிறுவனமான நிலா சீ பூட், நிலா மைன்ஸ் நிறுவன உரிமையாளருக்கும் சொந்தக்காரர். எனவே அந்த போட்டியிலும் கோபத்திலும் எழுதுகிறார் என நினைத்திருந்தோம். தற்போது வந்துள்ள கட்டுரையை பார்க்கும் போது தங்கள் பத்திரிக்கையும் கூட விவி-க்கு எதிராக எழுதுவதற்கு என்று போட்டி நிறுவனங்களிடம் பெரும் தொகை பணம் பெற்று விட்டது தெளிவாக நிரூபணம் ஆகிறது. இயற்கையாக ஒரு கதையை எவ்வாறு மிகப் பெரும் செய்தியாக மாற்றி உள்ளீர்கள். ஏற்கனவே இது போல் கதைகளை உற்பத்தி செய்யும் சந்தியா என்பவர் எழுதி வருகிறார். அவர் எவ்வாறு கதை தயாரிக்கிறார் என்பது https://youtu.be/2RqglwnF4AI?t=14 இணைப்பில் உள்ளது. அதில் உள்ளதை விட கூடுதலாக தாங்கள் கதையை செய்தியாக மாற்றுகிறீர்கள் என்பதை இந்த இனத்தில் பார்க்கும் போது தெரிகிறது. நாம் இது வரை நம்பிய ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் வரும் செய்திகள் அனைத்தும் இது போல் உற்பத்தி செய்யப் பட்ட கதைகள் தானோ என என்னை சந்தேகப்பட வைக்கிறது. இப்போது என் மனதில் எழும் சந்தேகம் தாங்கள் போட்டி கம்பெனியிடம் வாங்கிய பணத்திற்காக எழுதுகிறீர்களா அல்லது விவி நிறுவனமும் இதே ஊடகத்துறையில் போட்டியால் நுழைந்ததால் எழுதுகிறீர்களா என்பது தான். நான் இந்த பகுதியிலேயே இருப்பவன் என்பதால் உண்மை தெரிந்தது. உண்மை தெரியாத எத்தனை அப்பாவிகளை தாங்கள் இவ்வாறு பொய்யை செய்தியாக எழுதி நம்ப வைத்துக் கொண்டு இருப்பீர்கள்.

தாங்கள் செய்தியில் குறிப்பிட்டு இருக்கும்  அனைத்தும் உண்மையல்ல என்பதற்கான எல்லா ஆதாரங்களும் www.beachminerals.org  இணைப்பில் உள்ளது. குடும்ப பகையில் சகோதரர் கூறுவதை எடுத்து எழுதுவதற்கு பெயர் பத்திரிக்கை தர்மமா? 

தயவு செய்து மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நியாயத்தை எழுதுங்கள். அல்லது தாங்கள் நியாய தீர்ப்பிற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

இப்படிக்கு

எம். ராஜா
தலைவர் 
கட்டுமர நாட்டு படகு மீனவர் சங்கம்