Wednesday, 16 December 2015

"நம்பி கெட்டது நம்பியாறு" என தலைப்பிட்டு இந்து தமிழ் பத்திரிக்கையினர் வாங்கிய பணத்திற்கு வஞ்சனை இல்லாமல் பொய்யை மெய் போல் சித்தரித்து அருமையான ஒரு கட்டுரையை கற்பனையாக எழுதி இருந்தார்கள். அதில் ஒரு பகுதியில் தாது மணல் கொள்ளை என ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை உள்நோக்கத்தோடு எழுதி இருப்பதால் அதற்கு ஒரு ஆட்சேபணை மின் அஞ்சல் அனுப்பப் பட்டு நிர்வாகத்தில் இருந்து சில நபர்களை இது பொய் என நிரூபிப்பதற்கு அனுப்பி தர கேட்டுள்ளேன். அந்த அனுப்பப் பட்ட மின் அஞ்சல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



From: Raja Menavar Sangam <rajamenavar@gmail.com>
Date: 2015-12-16 9:31 GMT+05:30
Subject: ஆட்சேபணை - “இந்து தமிழ்” பத்திரிக்கையில் “நம்பி கெட்டது நம்பியாறு” என வெளியான செய்தி
To: flcomments@thehindu.co.in, flletters@thehindu.co.in, flnsub@thehindu.co.in, inetads@thehindu.co.in, nravi@thehindu.co.in, malinip@thehindu.co.in, malinip.thehindu@gmail.com, nram@thehindu.co.in, Ramakrishnan T <ramakrishnan67@gmail.com>, janarthananp75@gmail.com



பெறுநர்

ஆசிரியர்,
இந்து தமிழ் பத்திரிக்கை,
சென்னை.


அன்புடையீர்,

தங்களது “இந்து தமிழ்” பத்திரிக்கையில் “நம்பி கெட்டது நம்பியாறு” என்ற தலைப்பில் நேற்று (15.12.15) வெளியான செய்தி வழக்கம் போல் உள்நோக்கத்தோடு வாங்கிய பணத்தோடு விசம் கலந்து எழுதப்பட்டது. இது உள்நோக்கத்தோடு எழுதப்பட்டது என்பதை நான் நிரூபிக்க தயாராக உள்ளேன். நான் அதன் அருகில் உள்ள கிராமத்திலேயே வசிக்கிறேன். எனக்கு  வயது 60-க்கு மேல்  ஆகிறது. எனது 13-வது வயதில் எனது தந்தையார் மற்றும் உறவினர்களோடு நம்பியாறு பொழிமுகத்திற்கு மீன் பிடிக்க சென்றுள்ளேன். அப்போதும் இதே போல் தண்ணீர் கட்டியே இருக்கும். எப்போதாவது அமாவாசை நேரத்தில் கடல் நீர் நம்பியாறு பொழிமுகத்தில் வரும். எனவே அந்த நீர் எப்போதும் உப்பு நீராகவே இருக்கும். மீனவ சமுதாயத்தை சேர்ந்த நாங்கள் மட்டும் அல்ல. நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஏராளமான நபர்களும் அங்கு மீன் பிடிப்பார்கள். 

நீங்கள் ஏற்கனவே தாது மணலுக்கு எதிராக எழுதுவதற்கு என்று பெரும் தொகை பெற்றவர்கள். அவ்வாறு எழுதி வருபவர்கள். பாரம்பரியமிக்க இந்து பத்திரிக்கையில் இவ்வாறு காசுக்கு எழுதுவதற்கு என இந்து தமிழ் என வைத்து அதில் மூன்றாம் தர பத்திரிக்கையான நக்கீரனில் பணியாற்றிய தகுதியற்ற நபர்களை நீங்கள் பணிக்கு அமர்த்தியதால் உங்களது பத்திரிக்கையும் மூன்றாம் தரம் ஆகி விட்டது. உங்களுக்கு தெரிந்து காசுக்கு எழுதுகிறார்களா? தெரியாமல் ஆசிரியரும் அங்குள்ள ரிப்போர்ட்டர்களும் சேர்ந்து எழுதுகிறார்களா என்பதை விசாரியுங்கள். 

உங்கள் செய்தியில் பல்வேறு இடங்களில் ஆற்று மணல் அள்ளப்படுகிறது என்பது மட்டும் தான் உண்மை. இதர  அனைத்தும் பொய். கடந்த 50 வருடங்களாக எந்த நிலையிலும் நம்பியாற்றில் தொடர்ந்து நீர் வந்தது கிடையாது. மழைகாலத்தில் மட்டுமே வெள்ள நீர் வரும். இதனை நீங்கள் அனுப்பும் நபர்களோடு சேர்ந்து ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருந்து நீங்கள் குறிப்பிட்ட அத்தனை ஊர்களுக்கும் சென்று ஊரில் உள்ள வயது முதிர்ந்த பெரியோரிடம் உங்கள் ஆட்களே விசாரிக்கட்டும். ஆனால் நாங்கள் இருக்கும் போது அதனை வீடியோவும் செய்ய வேண்டும். அப்போது இது தாது மணல் கொள்ளை என்ற ஒரு வார்த்தையை சேர்ப்பதற்காக  உங்கள் ஆசிரியர் குழுவும் வேறு சிலரும் சேர்ந்து செய்த சதி என்பது நிரூபணம் ஆகும். தயவு செய்து அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

எந்த கருத்து எழுதினாலும் அவை பதிவேற்றப்படுவதில்லை. மாறாக பாராட்டி சில கருத்துகள் பதிவேற்றப்படுகின்றன. இதற்கு பெயர் பத்திரிக்கை விபச்சாரம் இல்லையா? கனிம நல தொழிலாளர் சங்க தலைவர் திரு.பாலகிருஷ்ணன் www.southernmines.org  என்ற இணையத்தில் இந்து தமிழ் பத்திரிக்கைக்கு எதிரான ஒரு கடிதத்தை பதிவிட்டு இருந்தார். அதனை வாசித்த நான் என்ன இவர் இவ்வளவு கடுமையாக இந்து தமிழ் பத்திரிக்கையை விமர்சித்துள்ளார் என நினைத்தது உண்டு. ஆனால் தற்போது இந்த நம்பியாறு பற்றி தாங்கள் போட்ட செய்தி தங்கள் உண்மை முகத்தை வெளிகொண்டு வந்து விட்டது. எனவே பாலகிருஷ்ணன் கொடுத்துள்ள கடுமை போதுமானது அல்ல என்பது எனது எண்ணம். 

உண்மை தான். நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாது மணல் சம்பந்தமான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்ததால்  தாங்கள் இவ்வாறு ஒரு செய்தியை காசு வாங்கி கொண்டு எழுதி விட்டீர்கள் என சில இளம் வழக்கறிஞர்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. இதற்கு பதில், இவ்வாறு பத்திரிக்கை நடத்துவதற்கு பதில் உங்கள் ஆசிரியரும் நிர்வாக குழுவும் “விளக்கு பிடிக்க போகலாம்” என்பது தான் எனது கருத்து.

திரு.ராம் அவர்கள் நிர்வாகத்தில் இருக்கும் வரை இந்து இவ்வளவு தரம் தாழ்ந்து போனதில்லை. திரு.ராம் அவர்களை விட்டு நிர்வாகம் மாறியதால் இவ்வாறு வழிப்பறிக்கும் விபச்சாரத்திற்கும் இந்து பத்திரிக்கை போய் விட்டது வேதனை அளிக்கிறது. தங்களது கட்டுரையாளர் பெயரையும், வயதையும், அவர் விலாசத்தையும் குறிப்பிடுங்கள். நீங்கள் போலியான ஒரு நபரை தயாரித்து இதனை எழுதி உள்ளீர்கள் என்பதையும் அவர் பெயர் அளவிற்கு கட்டுரையாளராக குறிப்பிடப் பட்டு உள்ளார் என்பதையும் நிரூபிக்கிறேன். 

கல்வி கொள்ளை அடிக்கும் ஏரி வேந்தன் பிச்சமுத்துவின் ஏரிகள் ஆக்கிரமிப்பு பற்றியோ கல்வி கொள்ளை பற்றியோ உங்கள் பத்திரிக்கையில் ஒரு செய்தியும் வராது. ஏனென்றால் அவர் கொள்ளையில் ஒரு பங்கை விளம்பரம் என்ற பெயரில் உங்களுக்கு தருகிறார். உண்மையிலேயே நீங்கள் திராணி உள்ள பத்திரிக்கை என்றால் பிச்சமுத்துவின் கல்வி கொள்ளை பற்றி அனைத்து ஆதாரங்களும் www.pmaed.org என்ற இணைப்பில் உள்ளது. அதனை எடுத்து எழுதுங்கள் பார்ப்போம். 

வழிப்பறி கொள்ளை நடத்துபவனுக்கும் இந்து தமிழ் பத்திரிக்கைக்கும் வித்தியாசம் இல்லை. பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வீர்கள் என்பதை ராம் நிர்வாகம் மாறிய பிறகு இந்துவும், இந்து தமிழும் நிரூபித்து வருகிறது. 

 கூலிப் படை பத்திரிக்கை இந்து தமிழ் என்று உங்கள் பத்திரிக்கையில் எழுதினால் வேண்டாத நபர்களை தாக்கி எழுத ஏராளமானோர் உங்களுக்கு பணம் தருவார்கள்.  இவ்வாறு பணம் சம்பாதித்து சாப்பிடுவதை விட மலத்தை சாப்பிடுவது மேல் என இந்த பத்திரிக்கையை சலூன் கடையில் படித்து சிலர் பேசியது மெத்த சரி என்பதை தெரிந்து கொண்டேன். வாழ்க உங்களது கொள்ளை பணி.

இப்படிக்கு

எம். ராஜா

No comments:

Post a Comment