Wednesday, 16 December 2015

பூனை வெளியே வந்து விட்டது. காசு வாங்கி பொய் செய்தி எழுதிய சஞ்சீவி குமார் நான் எங்களது ரிப்போர்ட்டரை அனுப்புகிறேன். கழிமுகங்களை சுட்டி காட்டி எனது நிலைப்பாட்டை தெரிவித்தால் பிரசுரிக்கிறோம் என பதில் அனுப்பினார். காசு வாங்கி கொண்டு எழுதிய அவரும் வந்தால் அல்லவா அவர் எழுதியது அனைத்தும் பொய் என்பதை நாமும் தெளிவாக காட்ட முடியும். எனவே அனைத்தையும் வீடியோ செய்யும் வசதியோடு அவரும் உடன் ரிப்போர்ட்டர்களும் வருவதற்கு பதில் மின் அஞ்சல் அனுப்பப் பட்டது. அவர் அனுப்பிய மின் அஞ்சலும் அதற்கு கொடுத்த பதில் மின் அஞ்சலும் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

From: Raja Menavar Sangam <rajamenavar@gmail.com>
Date: 2015-12-16 16:41 GMT+05:30
Subject: Re: ஆட்சேபணை கடிதம் தொடர்பாக
To: "Sanjeevi Kumar T L." <sanjeevikumar.tl@thehindutamil.co.in>
Cc: flcomments@thehindu.co.in, flletters@thehindu.co.in, flnsub@thehindu.co.in, inetads@thehindu.co.in, nravi@thehindu.co.in, malinip@thehindu.co.in, malinip.thehindu@gmail.com, nram@thehindu.co.in, Ramakrishnan T <ramakrishnan67@gmail.com>, janarthanan jana <janarthananp75@gmail.com>


அன்புடையீர் ,

தங்களது பதிலுக்கு மிக நன்றி. எப்போது வருவார்? யார் யார் வருவார்கள் என்பதை குறிப்பிடுங்கள். இதில் பார்க்க வேண்டியது ஆற்றின் கழிமுகங்கள் மட்டும் அல்ல. சிறுமளஞ்சியில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் வரை உள்ள அனைத்து கிராம மக்களிடமும் விசாரிக்கவும் வேண்டும். எனவே அந்த விசாரணையை அவர்கள் கூறும் செய்தியோடு வீடியோ செய்வதற்கு வசதியாக ஆட்களை அனுப்புங்கள். நீங்களும் உடன் வாருங்கள். என்று வருவார்கள் என குறிப்பிட்டால் அனைத்து கிராமங்களுக்கும் நானும் எனது மீனவர் சங்க உறுப்பினர்களும் உடன் அழைத்து சென்று அனைத்தையும் காட்டி வீடியோவில் பதிவு செய்து இது காசுக்காக உண்மைக்கு புறம்பாக நீங்களும், நக்கீரன் நெற்றிக்கண் புகழ் உங்கள் ஆசிரியரும் உள்நோக்கத்தோடு வெளியிடப் பட்டது என்பதை வீடியோ பூர்வமாகவே நிரூபிக்கிறேன். என்று வருவீர்கள் என்பதை தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

இப்படிக்கு

எம்.ராஜா


2015-12-16 11:56 GMT+05:30 Sanjeevi Kumar T L. <sanjeevikumar.tl@thehindutamil.co.in>:
அன்புள்ள வாசகர் திரு ராஜா அவர்களுக்கு,
வணக்கம். தாங்கள் எங்களது  நம்பியாறு கட்டுரை தொடர்பாக ஆட்சேபணை தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சல் கண்டோம். தங்களது எதிர்வினைக்கு நன்றி.எங்கள் நிருபரை உங்களை நேரில் சந்திக்க அனுப்புகிறோம். அவரிடம் ஆற்றின் கழிமுகங்களை சுற்றிக்காட்டி உங்களது நிலைப்பாட்டை தெரிவித்தால் அதனை பிரசுரிக்கிறோம்.  நன்றி.
இப்படிக்கு,
அன்புள்ள,
டி.எல்.சஞ்சீவிகுமார்
சிறப்புச் செய்தியாளர்,
‘தி இந்து’ - தமிழ்,
சென்னை.

No comments:

Post a Comment